பெங்களூரு டெஸ்ட்: ரச்சின் ரவீந்திரா அபார சதம்...நியூசிலாந்து 402 ரன்கள் குவிப்பு

4 weeks ago 7

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஜெய்ஸ்வால் களமிறங்கினர் . தொடக்கத்தில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் . பின்னர் வந்த சர்பராஸ் கானும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.தொடர்ந்து ஜெய்ஸ்வால் , ரிஷப் பண்ட் ஆகியோர் சற்று நிலைத்து ஆடினர் .ஆனாலும் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த கே எல் ராகுல் , ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். மறுபுறம் சிறிது நேரம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . இறுதியில் இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசி மேத் ஹென்றி 5 விக்கெட், வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் , சவுதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லேதம்- டிவோன் கான்வே களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். லேதம் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே, தொடக்கம் முதலே அதிரடி காட்டி ரன்சேகரிப்பில் ஈடுபட்டார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். வில் யங் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.நியூசிலாந்து அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 50 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது .

டேரில் மிட்சேல் 18 ரன்களுக்கும் , டாம் பிளண்டல் 5 ரன்களுக்கும் கிளென் பிலிப்ஸ் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் மறுபுறம் ரச்சின் ரவீந்திரா நிலைத்து ஆடினார். தொடர்ந்து களமிறங்கிய டிம் சவுதி ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து சிறப்பாக ஆடினார் . ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தினார் .டிம் சவுதி அரைசதமடித்தார் . டிம் சவுதி 65 ரன்களுக்கும் , ரச்சின் ரவீந்திரா 134 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர் . இறுதியில் நியூசிலாந்து 402 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது . இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர் . 

Read Entire Article