பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால்...டிவில்லியர்ஸ் ஓபன் டாக்

3 hours ago 1

பெங்களூரு,

இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இருநாடுகளுக்கும் இடையே அமைதி திரும்பியுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று நடைபெறும் 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

இந்த நிலையில், பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் போட்டியை காண இந்தியா வருவேன் என முன்னாள் பெங்களுரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு முன்னேறினால், அதனை காண்பதற்காக நான் இந்தியாவிற்கு வருவேன். விராட் கோலியுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை தூக்குவதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருந்துவிட போவதில்லை. இந்த கோப்பையை பெற நான் பல வருடங்களாக முயற்சி செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

Read Entire Article