ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று முன் தினம்நள்ளிரவு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 46-ஆக குறைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு பிப்.5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 58 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 8 வேட்பாளர்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் நேற்று முன் தினம் மாலை தெரிவித்தார்.