பூர்வீக கிராமத்தில் மகனுக்கு காதணி விழா நடத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

3 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன், தனது 3-வது மகனுக்கு தன்னுடைய பூர்வீக கிராமத்தில் காதணி விழாவை எளிமையான முறையில் நடத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அமைந்துள்ள தன்னுடைய பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில், தங்கள் குலதெய்வமான மகா மாரியம்மன் கோவிலில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3-வது மகன் பவனுக்கு உறவினர்கள் மற்றும் கிராமத்தார் முன்னிலையில் காதணி விழா நடத்தினார். தொடர்ந்து அனைவருடனும் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  

Read Entire Article