பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயிலை பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க காஞ்சிபுரம் காவல் துறை பரிந்துரை!

3 hours ago 3

பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையத்தை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும், செவிலிமேடு பகுதியில் இருந்து வாலாஜாபாத் அருகே உள்ள வெண்குடி வரை பாலாற்றை ஒட்டி புதிய சாலை அமைக்க வேண்டும் என்றும் காவல் துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரமாக உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பட்டுச் சேலைகள் வாங்க வருபவர்கள், சுற்றியுள்ள தொழிற் சாலைகளில் பணிக்குச் செல்பவர்கள் ஆகியோரால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Read Entire Article