ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், பூந்தமல்லி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் 6 நாட்களுக்கு பிஎல்சி, பிஎல்ஏ 2 முகவர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி தொகுதியில் அடங்கிய கிழக்கு ஒன்றியத்தில் வரும் 9ம் தேதி காலை பாக்கம் பகுதியில் சே.பிரேம் ஆனந்த் தலைமையிலும், பின்னர் 25 வேப்பம்பட்டு பகுதியிலும், பாரிவாக்கத்தில் ப.ச.கமலேஷ் தலைமையிலும், மாலை பூந்தமல்லி நகரம், கரையான்சாவடியில் திருமலை தலைமையிலும், நசரத்பேட்டையிலும் பிஎல்சி, பிஎல்ஏ 2 பாக முகவர்களின் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில், தொகுதி பார்வையாளர் பிடிசி செல்வராஜ் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குகிறார்.
மறுநாள் (10ம் தேதி) காலை காட்டுப்பாக்கத்தில் ப.ச.கமலேஷ் தலைமையிலும், பழைய நகராட்சி அலுவலகம் அருகிலும், திருவள்ளூர் வடக்கு ஒன்றியத்தில் அடங்கிய வெள்ளியூரில் புஜ்ஜி ராமகிருஷ்ணன் தலைமையிலும், எல்லாபுரம் மத்திய ஒன்றியத்தில் தங்கம் முரளி தலைமையிலும், மாலை சென்னீர்குப்பத்திலும், பூந்தமல்லி மேற்கு ஒன்றியத்தில் அடங்கிய சித்துக்காட்டில் தேசிங்கு தலைமையிலும், மாலை கொரட்டூரிலும் பிஎல்சி, பிஎல்ஏ 2 பாக முகவர்களின் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.
மேலும், வரும் 11ம் தேதி மாலை திருமழிசை பேரூரில் தி.வே.முனுசாமி தலைமையிலும், 12ம் தேதி மாலை குமணன்சாவடியிலும், 13ம் தேதி காலை தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மதியம் குருவாயல் பகுதிகளிலும் 14ம் தேதி மாலை பூந்தமல்லியிலும் பிஎல்சி, பிஎல்ஏ 2 பாக முகவர்களின் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில், தொகுதி பார்வையாளர் பிடிசி செல்வராஜ் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குகிறார். இக்கூட்டத்தில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், பிஎல்சி, பிஎல்ஏ 2 பாக முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தகவல் தெரிவித்துள்ளார்.
The post பூந்தமல்லி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல் appeared first on Dinakaran.