பூந்தமல்லி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

3 months ago 19

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னீர்குப்பத்தில் நடந்தது. இதில், ஒன்றிய அவைத் தலைவரும், கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான வி.ஆதிகேசவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான கே.ஜி.டி.கவுதமன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அனைவரையும் வரவேற்றார்.

மேலும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் க.வைத்யநாதன், நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பேரூர் செயலாளர் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் வயலை ராஜா, பி.எம்.ரவீந்திரன், முத்துகிருஷ்ணன், திருமலை, கோடீஸ்வரி அன்பு, ஒன்றிய நிர்வாகிகள் வயலை நடராஜன், வெற்றிவீரன், சத்தியசீலன், செண்பகவல்லி தனசேகரன், சத்தியமூர்த்தி, சாந்தி சம்பத், எஸ்.கே.நேதாஜி, ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன், துணைத் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், வி.மணிகண்டன், இ.ஜெயசீலன், ருத்ரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் தி.பா.கண்ணன், மாவட்ட துணை செயலாளர் கா.சு.ஜனார்த்தனன், முன்னாள் எம்பி என்.எஸ்.ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் கே.ராஜகோபால், அபிஷேக் ஜேக்கப், டாக்டர் ஞா.பிரேம்குமார், மாவட்ட அணிகளின் செயலாளர்கள் காமதேனு ராஜேந்திரன், கோபிநாத், அந்தமான் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article