பூதலூரில் காங்கிரஸ் கமிட்டி கிராம மறுசீரமைப்பு கமிட்டி தொடக்க விழா

3 months ago 12

திருக்காட்டுப்பள்ளி,பிப்.10: பூதலூரில் இந்திய காங்கிரஸ் கமிட்டி கிராம மறுசீரமைப்பு கமிட்டி தொடக்க விழா நடைபெற்றது. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பூதலூர் தெற்கு வட்டாரம் கோயில் பத்து ஊராட்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தல்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆணைக்கிணங்க கிராம மறு சீரமைப்பு கமிட்டி தொடக்க விழா வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், சிறப்பு அழைப்பாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினரும் திருவையாறு தொகுதி பொறுப்பாளருமான அறிவழகன் முன்னிலையிலும் நடந்தது.

தெற்கு வட்டாரத் தலைவர் வெங்கட்ராமன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைராஜ் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.சி.யூ மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்ராஜ் மாவட்ட செயலாளர் ஆச்சம்பட்டி பாலு, பூதலூர் அன்பழகன், சுரேந்தர், நாகராஜ்,கொசுப்பட்டி சுப்பிரமணியன், பீட்டர், ராஜாங்கம், ஐ.என்.டி.யு. சி. ராமமூர்த்தி ஆகியோர் காங்கிரஸ் பேரியக்க கமிட்டியில் இணைந்தனர்.

The post பூதலூரில் காங்கிரஸ் கமிட்டி கிராம மறுசீரமைப்பு கமிட்டி தொடக்க விழா appeared first on Dinakaran.

Read Entire Article