
புதுடெல்லி,
டெல்லி நஜப்கார் நாக்லி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அறை ஒன்றின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக அது திறக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து போலீஸ் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அந்த வீட்டைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியும், மற்றொரு 20 வயது சிறுவனும் அங்கே தூக்கில் பிணமாக தொங்கினர். போலீசார் பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவனும், சிறுமியும் காதலர்கள் என்பது தெரிய வந்தது. காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதில் சந்தேகம் இருப்பதாக சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சிறுமியின் மாமா ஏற்கனவே சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அழைப்பு வந்ததன் பேரிலேயே சிறுவன் அங்கே சென்றதாகவும் கூறினர். இவர்களது புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.