'புஷ்பா 2' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

3 days ago 3

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசர் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். 

இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில், 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ளநிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தமிழ்நாட்டில் ஒரு சில திரையரங்குகளில் தொடங்கி இருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.

Feel the rage, witness the action! #Pushpa2TheRule tickets are live ❤️ - Book before it's too late ⏰ BOOKINGS OPEN ️ : https://t.co/r3bWBR8AWY#PushpaTheWildFire #Pushpa2TheRule#Pushpa2TheRuleOnDec5thIcon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasilpic.twitter.com/RYXqMcxm2j

— AGS Entertainment (@Ags_production) December 1, 2024
Read Entire Article