'புஷ்பா 2 தி ரூல்' டிரெய்லரில் பாதி மொட்டையடித்த தலையுடன் காணப்பட்ட நடிகர் இவரா?

7 months ago 37

சென்னை,

புஷ்பா படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள படம் புஷ்பா2: தி ரூல். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.இதில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத்பாசில் ஆகியோர் கவனம் ஈர்த்தனர்.

அதே சமயம், இந்த டிரெய்லரில், பாதி மொட்டையடித்த தலையுடன் இடம்பெற்றிருந்த ஒரு புதிய கதாபாத்திரமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனையடுத்து அவர் யார் என்பதை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். அது வேறுயாரும் இல்லை, பிரசாந்த் நீலின் கேஜிஎப் 1, 2, சமீபத்தில் வெளியான தேவரா படங்களில் நடித்திருந்த கன்னட நடிகர் தாரக் பொன்னப்பாதான். இவர் கேஜிஎப் படங்களில் தயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து, இப்படத்தில் தாரக் பொன்னப்பாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். புஷ்பா 2: தி ரூல் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

Read Entire Article