புழல் ஏரியில் நீர் திறப்பு; வடபெரும்பாக்கம் சாலையில் தேங்கிய வெள்ளம்

6 months ago 21

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் செல்லும், வடபெரும்பாக்கம் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வடகரை, விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம் பகுதி மக்கள், வடபெரும்பாக்கம் வழியாக சென்னைக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு அப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read Entire Article