சாமி புகைப்படங்களுக்குப்பின்னே கஞ்சாவை பதுக்கி வைத்த நபர் - அதிர்ச்சி சம்பவம்

5 hours ago 3

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் டோல்பேட் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ரோகன் சிங் என்பவரின் வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் பூஜை அறையில் இந்து மத சாமி புகைப்படங்களுக்குப்பின்னே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ரோகன் சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து ஐதாராத்தில் விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article