பெரம்பூர்: சென்னை பெரம்பூர் பிபி.சாலை, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ளது. புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. முனுசாமி தெரு, ருத்ரப்பா தெரு, அய்யாவு தெரு, காட்டூர் நல்லமுத்து தெரு, சந்தியப்பன் தெரு மற்றும் அங்காளம்மன் கோவில் தெரு, கே.எம்.கார்டன், டிகாஸ்டர் ரோடு, நாராயணசாமி தெரு, தட்டாங்குளம், ஸ்டீபன்சன் சாலை, பிரகாஷ் ராவ் காலனி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் நடந்துசென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலைமை உள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வியாசர்பாடி எம்ஜிஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், எம்கேபி.நகர் நார்த் அவென்யூ உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் வடியாமல் சுமார் 4 அடிக்கு மேல் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் சென்று மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின் பெட்டிகள் மிகவும் தாழ்வாக உள்ள இடங்களில் மின்சாரமும் தடைபட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
The post புளியந்தோப்பு, வியாசர்பாடியில் மழைநீர் வடியாததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.