புளியங்குளத்தில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

1 month ago 4

சாத்தான்குளம், டிச. 10: புளியங்குளத்தில் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புளியங்குளத்தில் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ் தலைமையில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வீடு, வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தினர். ஏற்பாடுகளை கருங்கடல் ஊராட்சி தலைவர் நல்லத்தம்பி, ஊராட்சி செயலர் முருகேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post புளியங்குளத்தில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Read Entire Article