புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சென்ற ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை கை குலுக்கி வரவேற்றார் ஷெபாஸ் ஷெரீப்!!

1 month ago 5

இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுடன் கை குலுக்கினார்.காஷ்மீர் பிரச்னை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே சரியான உறவு இல்லை. இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.இந்த மாநாட்டை ஒட்டி ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடிக்கு பதிலாக ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.

இதையடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ஜெய்சங்கரின் விமானம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள நூர் கான் விமானத் தளத்தில் நேற்று மதியம் 3:30 மணிக்கு தரையிறங்கியது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை இக்குநர் ஜெனரல் (தெற்காசியா) இலியாஸ் மெகமூத் நிஜாமி வரவேற்றார். மேலும், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் பாரம்பரிய உடை அணிந்து ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.இதனையடுத்து, விருந்தினர்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த இரவு விருந்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது ஷெபாஸ் ஷெரீப், ஜெய்சங்கரை கைகுலுக்கு உற்சாகமாக வரவேற்றார்.

இரண்டாவது நாளான இன்று, மாநாடு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த ஜெய்சங்கரை, ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். அப்போது, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர்.
இந்த மாநாட்டில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையேயான உறவுகள் பதற்றமாக இருந்தபோதும், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை. கடைசியாக பாகிஸ்தான் சென்ற ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆவார்.கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் தொடர்பான ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவின் வெளியுறவுச் செயலராக இருந்த ஜெய்சங்கர், சுஷ்மா சுவராஜ் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

The post புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சென்ற ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை கை குலுக்கி வரவேற்றார் ஷெபாஸ் ஷெரீப்!! appeared first on Dinakaran.

Read Entire Article