
ஜெய்ப்பூர்,
2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் சக்கட் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் மீனாவும் அடக்கம். ஹேம்ராஜின் மனைவி மதுபாலா. இந்த தம்பதிக்கு மகள் உள்ளார். இதனிடையே, வீரமரணமடைந்த ஹேம்ராஜின் இறுதிச்சடங்கில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்றார். மேலும், ஒரு சகோதரனாக உங்களுக்கு துணை நிற்பதாகவும் மதுபாலாவுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா உறுதியளித்தார். மதுபாலாவின் மகள் திருமணத்தை முன்னின்று நடத்துவதாகவும் ஓம்பிர்லா உறுதியளித்தார்.
இந்நிலையில், மதுபாலாவின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்குமுன் உறுதியளித்தபடி ஓம்பிர்லா இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சகோதரன் நிலையில் இருந்து மதுபாலாவின் மகள் திருமணத்தை ஓம்பிர்லா நடத்தி வைத்தார். இந்த சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.