புதுடெல்லி: பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள், கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விசயத்தில் புல்டோசர்களை கொண்டு இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
பல தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள், ‘புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடிப்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு என்று சட்டம் தான் இருக்க வேண்டுமே தவிர, அது மதங்களை அடிப்படையாக கொண்டு இருக்கக் கூடாது. குற்றம் சட்டப்படுவது ஒரு அடிப்படை உரிமையாக இருக்க முடியுமா என்றால் அது கேள்வியாக தான் உள்ளது’ என்றனர்.
The post புல்டோசர் கொண்டு வீடுகள் அகற்றம்; ஒரு பிரிவினரிடம் மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.