பாப்பாரப்பட்டி, மே 8: பாப்பாரப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாரப்பட்டி மையப்பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிக்கு செல்பவர்கள், அதிகம் வருவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகாலை 3 மணிக்கு தினசரி காய்கறி மார்க்கெட், வியாழக்கிழமை சந்தைகள் கூடுகிறது. இதனால் சந்தைக்கு வருபவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் என கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது.
குற்றசம்பவங்கள் குறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளிக்க வேண்டும். மேலும் பஸ் ஸ்டாண்டில், தகராறு ஏதேனும் ஏற்பட்டால், சமரசம் செய்ய வழிவகை இல்லாமல் உள்ளது. எனவே, குற்றச்சம்பவங்களை தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில், புறகாவல் நிலையம் அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாப்பாரப்பட்டி பஸ் நிலையம் அருகே, கழிப்பறையுடன் கூடிய தனி கட்டிடம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.