புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் 10-வது வெற்றி

6 months ago 20

புனே,

12 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது புரோ கபடி லீக் புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 97-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன்- உ.பி. யோத்தாசை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உ.பி. யோத்தாஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை தோற்கடித்தது. அதிகபட்சமாக உ.பி. அணியில் ககன் கவுடா 15 புள்ளிகள் திரட்டினார். புனேரி பால்டன் தரப்பில் பங்கஜ் மொஹிதி 11 புள்ளிகள் எடுத்தார். 17-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி. யோத்தாஸ் அணிக்கு இது 9-வது வெற்றியாகும். புனேரி பால்டன் அணி சந்தித்த 7-வது தோல்வியாகும்.

மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 34-32 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 10-வது வெற்றியை சுவைத்தது.

Read Entire Article