புருவச் சீரமைப்பு செய்யப் போறீங்களா? ஒரு நிமிடம்!

3 months ago 16

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

பண்டிகை, வீட்டு விசேஷம் வந்து விட்டால் பெண்கள் முதலில் புருவங்களை அழகுபடுத்திக் கொள்ள அழகு நிலையங்களுக்கு படை எடுக்கின்றனர். இது வழக்கமான ஒரு நிகழ்வு
தான். புருவச் சீரமைப்புகளால் அழகு கிடைக்கிறதோ இல்லையோ காலப் போக்கில் அது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது கண்கூடு.

*புருவ முடிகள் வளரும் இடம் பிராணன் இயங்கும் இடம். இறப்பு நெருங்கும் போது புருவ முடிகளைத் தொட்டாலே கையோடு வந்துவிடும். அந்தளவுக்கு உயிருக்கும் புருவ
முடிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

*புருவ முடிகளை அழகாக்கிக் கொள்கிறோம் என்ற பேரில் அடிக்கடி சீரமைப்பதால் உயிர் நிலையோடு சம்பந்தப்பட்ட இடங்கள் பலவீனப்பட்டுவிடும். காலப்போக்கில் அந்த பலவீன நிலை பெண்களுக்கு குணமாக்க முடியாத வியாதிகளை ஏற்படுத்த வழிவகை செய்யும்.

* பிராண சக்தி குறைவதால் ஆற்றல் குறைந்து, பிராண சக்தி குறைவான குழந்தைகளை பெற்று ஆரோக்கியம் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.

*உடலில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது. மேலும் உடலின் முக்கிய சக்தி பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன. எனவே அந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே வியாதிகளை உண்டு பண்ணிக் கொள்வது போலாகும்.

* நம் நாட்டு கலாசாரத்திற்கு ஏற்றாற் போல் சுத்தமான விளக்கெண்ணெயை கண் புருவங்களில் தடவுவதாலும், கண்ணில் விட்டுக் கொள்வதாலும் ஆயுளையும், புருவங்களின் அழகையும், கண் பார்வையையும் நீண்ட நாள் நலத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று நமது பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*பெண்களே அழகுபடுத்தி வளப்புடன் வலம் வருவது முக்கியம்தான். அதைவிட முக்கியம் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது.

தொகுப்பு: எஸ்.உஷா ராணி, கோவை.

The post புருவச் சீரமைப்பு செய்யப் போறீங்களா? ஒரு நிமிடம்! appeared first on Dinakaran.

Read Entire Article