புயல் ஏன் உருவாகவில்லை...?- இது தான் காரணமாம்...

4 months ago 18
வங்கக் கடலில் நீடித்துவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏன் புயலாக வலுப்பெறவில்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் கீழ்பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று பிரிதல் இரண்டும் முறையாக இல்லாததாலும், காற்று முறிவு ஏற்பட்டதாலும் புயலாக வலுப்பெற முடியவில்லை என்று அவர் கூறினார். வடக்கு வங்கக் கடலின் மேலே வளிமண்டலத்தில் நிலவிய 2 சுழற்சிகள் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வை நிறுத்தியதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். நீண்ட நேரமாக நகர முடியாமல் இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று மாலையில் வடகிழக்கு திசையில் தமிழகத்தை விட்டு விலகியதால் மழை வாய்ப்பு குறைந்தது. மீண்டும் தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நகரும் போது தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read Entire Article