பும்ரா உடற்தகுதியுடன் உள்ளாரா..? - ஜடேஜா கொடுத்த அப்டேட்

3 months ago 9

கட்டாக்,

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இடம் பிடித்துள்ளார். ஆனால், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திற்கு பின்னர் ரவீந்திர ஜடேஜாவிடம் பும்ராவின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜடேஜா கூறியதாவது, பும்ரா உடனே குணமாகி, விரைவில் விளையாட வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

அவரது காயம் குறித்து, எனக்கு முழுமையாக தெரியாது. எப்போது குணமடைந்து, இந்திய அணிக்கு திரும்புவார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாவது. அவர் விரைவில் குணைமடைந்தால் மிகவும் நல்லது. அவர் அணிக்கு திரும்பினால் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article