கோவை, மே 8: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் ரோட்டில் சுமார் 150 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குப்பை மாற்று நிலையம் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இப்பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இக்குப்பை மாற்று நிலையத்திற்கு, அருகாமையில் உள்ள மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 20 வார்டுகள், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 5 வார்டுகள் மற்றும் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 5 வார்டுகள் ஆகிய பகுதிகளில் இருந்து அன்றாடம் சேகரம் ஆகும் குப்பைகள் கொண்டு வரப்படுகிறது.
இதன்மூலம், மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில், அன்றாடம் குப்பை சேகரிக்கும் பணி மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணி மேம்படும். அத்துடன், இக்குப்பை மாற்று நிலையத்தின் மூலமாக திடக்கழிவு மேலாண்மை பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
The post புனரமைக்கப்பட்ட குப்பை மாற்று நிலையம் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.