புனரமைக்கப்படுமா வைகை அணை? - வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்ப்பு

1 week ago 4

மதுரை: ''பாசன நீரை கூடுதலாக தேக்கி வைக்க வைகை அணையை தூர்வாரி புனரமைத்து தர வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்,'' என்று தென் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. இந்த அணை கட்டி திறக்கப்பட்ட பின் தற்போது வரை தூர்வாரப்படவில்லை.

Read Entire Article