மதுராந்தகம்:புத்திரன்கோட்டை ஊராட்சியில், 13 பழங்குடியினருக்கு ₹66 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு எம்எல்ஏ பாபு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், புத்திரன் கோட்டை ஊராட்சி பெரியார் நகர் இருளர் காலனி பகுதியில் 13 பழங்குடியினர் குடும்பங்கள் குடிசை வீடுகளில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல்குமார் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் மனு அளித்தார்.
இதனையடுத்து, ஜன்-மேன் திட்டத்தின் மூலம் ₹66 லட்சம் மதிப்பில் 13 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முரளி அனைவரையும் வரவேற்றார்.
இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, 13 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார், கவுன்சிலர் இனிய மதிக்கண்ணன், அவைத்தலைவர் வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமணி ராமையா, முரளி, வடிவேல், ராஜசேகர், மலர் சங்கர், சாம்பசிவம், விநாயகம், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
The post புத்திரன்கோட்டை ஊராட்சியில் ரூ.66 லட்ச மதிப்பீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள்: எம்எல்ஏ பாபு அடிக்கல் appeared first on Dinakaran.