புத்தாண்டு கொண்டாட்டம்: விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

4 months ago 12

சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதி மீறல்களில் ஈடுபட்டால் ANPR கேமரா மூலமாக கண்டறிந்து, தாமாகவே வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு,

* குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்.

* அதிக வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்

* சாகச சவாரி செய்தல்,

* இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல்,

* தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல்.

* ஒலி மாசு ஏற்படுத்துதல்

போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடுவதுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article