சேலம், நவ.28: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நாளை புத்தக திருவிழா தொடங்குகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், டி.எம்.செல்வகணபதி எம்.பி., ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனிடையே புத்தக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) லலித்ஆதித்ய நீலம் உடனிருந்தார். புத்தக கண்காட்சியை முன்னிட்டு நாள்தோறும் மாலையில் சிறப்பு விருந்தினர்களின் கருத்துரைகள் நடைபெறவுள்ளது. அதன்படி, முதல்நாளான நாளை, தன்னம்பிக்கை பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.
தொடர்ந்து, 30ம் தேதியன்று நாஞ்சில்நாடன், 1ம் தேதியன்று பவா செல்லதுரை, 2ம் தேதி யுவன் சந்திரசேகர் ஆகியோர் பேசுகின்றனர்.தொடர்ந்து 3ம் தேதியன்று ஆனந்தகுமார் மற்றும் ஹரிகிருஷ்ணன், 4ம் தேதியன்று பெருமாள் முருகன், 5ம் தேதி சித்ரா பாலசுப்ரமணியம், 6ம் தேதி ‘‘கச்சிதம் என்பது கதை’’ என்ற தலைப்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் சுந்தர ஆவுடையப்பன், 7ம் தேதி விஷ்ணுபுரம் சரவணன், 8ம் தேதி ரேவதி, 9ம் தேதி ஜீவானந்தம் ஆகியோர் பேசுகின்றனர்.
The post புத்தகத் திருவிழா நாளை ெதாடக்கம் appeared first on Dinakaran.