சென்னை: மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் பொதுமக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் சைபர் கிரிமினல்களின் மிரட்டல்கள், அதனால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து தப்பிப்பது, விழிப்புடன் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றத்தின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான டி.என்.வள்ளிநாயகம் வரவேற்றார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வருமான வரித்துறை ஆணையர் வி.நந்தகுமார் பேசியதாவது: கிரெடிட், டெபிட் கார்டு, மெயில் ஐடி, நெட்பேங்கிங் போன்றவற்றில் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ‘பாஸ்வேர்டு’ வைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அதனை எளிதாக தெரிந்து கொண்டு சைபர் குற்றவாளிகள் அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி உங்கள் தகவல்கள், தரவுகளை எடுத்து பணத்தை திருடும் அபாயம் உள்ளது. எனவே, அதனை அடிக்கடி மாற்ற வேண்டும்.