புதுடெல்லி: புதுச்சேரியைச் சேர்ந்த சி.செல்வராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். செல்வராணி தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தையின் இந்து மதத்தின் அடிப்படையில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்கும்படி கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.