புதுவை மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்கள்

1 month ago 6

புதுச்சேரி, டிச. 12: புதுச்சேரி தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விசைப்படகு, பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் வரும் 13ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் மீன்வளத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் மாலை விசைப்படகில் கடலுக்குச் சென்றவர்களின் வலையில் 2 ராட்சத புலி திருக்கை மீன்கள் சிக்கின. மீன்வளத்துறை அறிவித்ததன் பேரில் உடனடியாக அவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர். திருக்கை மீன்கள் பெரிய அளவில் இருந்ததால் அவற்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். திருக்கை மீன்கள் ஒவ்வொன்றும் 250 கிலோவுக்கு மேல் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். இவற்றின் விலை பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

The post புதுவை மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்கள் appeared first on Dinakaran.

Read Entire Article