புதுச்சேரி: புதுச்சேரியில் சமீபகாலமாக அரசு அலுவலகங்கள், முக்கிய ஓட்டல்கள், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் மற்றும் புதுச்சேரி கவர்னர் மாளிகை, முதல்வர் ரங்கசாமி வீடு மற்றும் பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கவர்னர் மாளிக்கைக்கு நேற்றும் இமெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் கவர்னர் மாளிகையில் அதிரடி சோதனை நடத்தினர். அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. சோதனையின்போது கவர்னர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் அவரது குடும்பத்தார் இல்லை. தற்காலிக கவர்னர் மாளிகை கணபதி ஹோமத்தில் பங்கேற்றிருந்தனர். சோதனை முடிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், துணைநிலை ஆளுநர், அவரது குடும்பத்தினர் ராஜ்நிவாஸ் திரும்பினர்.
The post புதுவை கவர்னர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.