தஞ்சாவூர், ஜூலை 1: : தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள புதுப்பட்டினம் கிராமம் மற்றும் பூதலூர் வட்டாரத்தில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் முன்னிலையில் உழவரை தேடி வேளாண்மை முகாம் நடைபெற்றது.
இதில் புதுப்பட்டினம் கிராமத்தில் தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ்ச்செல்வி மற்றும் மைக்கேல்பட்டி கிராமத்தில் பூதலூர் தோட்டக்கலை அலுவலர் நித்திஸ் ஆகியோர் தோட்டக்கலைத்துறை சார்பாக பங்கு பெற்று தோட்டக்கலைத்துறையின் 202526ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட அரசின் புதிய திட்டங்கள் பற்றி எடுத்து கூறினர்.
மேலும் வயல் ஆய்வு மேற்கொண்டு பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது பற்றியும் அதற்கான பரிந்துரைகள் எடுத்து கூறப்பட்டது. நுண்ணீர் பாசன திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளிடம் எடுத்து ரைக்கப்பட்டது. இம்முகாமில் வேளாண்மை துறை, வேளாண் வணிக துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, சர்க்கரை துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் பங்கு பெற்று அவர்களின் துறையின் நலத்திட்டங்களை விவசாயி களிடம் எடுத்து கூறினார்கள். மேலும் விவசாயிகளின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றுக்கொண்டு TNAgrisnet என்ற இணையத்தளதில் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
The post புதுப்பட்டினம், மைக்கேல்பட்டியில் உழவரை தேடி வேளாண்மை முகாம் appeared first on Dinakaran.