புதுச்சேரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

4 days ago 4

புதுச்சேரி,

புதுச்சேரியில் இருந்து இன்று மாலை பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. சரியாக விமானம் மாலை5.15 மணியளவில் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு, சேவை ரத்துசெய்யப்பட்டது.

ரத்துசெய்யப்பட்ட விமானத்தில் பாஜக தேசிய பொதுச்செயலர் தருண் சுக், நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் உள்பட 70 பேர் இருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Read Entire Article