புதுச்சேரியில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்: கடற்கரை மணலில் இறங்க தடை

2 months ago 7

புதுச்சேரி: புதுச்சேரியில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரை, நகரப் பகுதிகளில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். கடற்கரை மணலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் புயலால் புதுவையில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று இரவு முழுவதும் விடிய விடிய அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இன்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க துவங்கியுள்ளது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

Read Entire Article