புதுச்சேரி | பாஜகவில் பிளவை தடுக்க 3 MLA-க்கள் ராஜிநாமா - சாய் சரவணக்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

5 hours ago 2

புதுச்சேரி: கட்சி பிளவைத் தடுக்க அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பட்டியலின அமைச்சரின் ஆதரவாளர்கள், அமைப்புகளால் கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் என்ஆர். காங்கிரசுக்கு முதல்வர், 3 அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு பேரவைத்தலைவர், 2 அமைச்சர்கள் தரப்பட்டன.
மத்திய அரசு நேரடியாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது.

Read Entire Article