புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘குரங்கு பெடல்’ தேர்வு..!!

3 months ago 34

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாத் துறையில் நடிப்பு மட்டுமின்றி புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் சிறந்த படங்களையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி பல பாராட்டுக்களையும், உலக சினிமா விழாக்களில் பல விருதுகளையும் பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் சிவகார்த்திகேயன் தயாரித்ததே. கனா, டாக்டர், டான், நெஞ்முண்டு நேர்மையுண்டு போன்ற படங்களையும் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான மற்றொரு படம் தான் குரங்கு பெடல். ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ சிறுகதையை தழுவி கமலக்கண்ணன் இயக்கியுள்ள படம் ‘குரங்கு பெடல்’. இதற்கு முன் இவர் ‘வட்டம்’ மற்றும் ‘மதுபான கடை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த படம் சொந்த சைக்கிள் வைத்திருக்கும் சிறுவனுக்கும் வாடகை சைக்கிளில் ஓட்டக் கற்றுக் கொள்ளும் சிறுவனுக்கும் யார் முதலில் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை. 1990களின் பால்ய வயது நினைவுகளை குரங்குப் பெடல் படம் கண்முன் நிறுத்தியது. இந்தப் படத்திற்கு தற்போது விருது கிடைத்துள்ளது. புதுச்சேரி மாநில அரசின் கடந்த 2022-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் பட்டியலில் குரங்கு பெடல் படம் தேர்வாகியுள்ளது. வருகிற அக்டோபர் 4ம் தேதி திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இயக்குநர் கமலக்கண்ணணுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்குகிறார்.

The post புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘குரங்கு பெடல்’ தேர்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article