புதுக்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி பணம், நகை கொள்ளை - போலீசார் விசாரணை

2 months ago 10
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்கச் செயின், தூங்கிக் கொண்டிருந்த அப்பாஸ் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின், சுமார் 15  லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தடுக்க வந்த அப்பாஸை கடுமையாகத் தாக்கி தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Entire Article