புதுக்கோட்டையில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

3 hours ago 1

 

புதுக்கோட்டை, மே 7: இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், ராஜராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், 102 வயது தியாகி வீரப்பனுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இதில், மாவட்ட தியாகிகள் குடும்பநல பேரமைப்பு சார்பில் அதன் தலைவர்,தனபதி கலந்துகொண்டு பேசினார். பின்னர், அனைத்து வாரிசுகளும் அவரவர்களின் கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் தெரிவித்தும் மனுக்களாகவும் வழங்கினர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு செய்து கொடுப்பதாக உறுதி தெரிவித்தனர்.

The post புதுக்கோட்டையில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article