ஜம்மு காஷ்மீர்: ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் ஜெய் ஹிந்த் என இந்திய ராணுவம் பதிவு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணையை கொண்டு இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தாக்குதலுக்கு தயார் என்றும், வெற்றிக்கான பயிற்சி என்றும் இந்திய ராணுவம் வீடியோ பதிவு வெளீயிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல். மேலும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காலை 10 மணிக்கு முழுவிவரம் தெரியவரும் என இந்திய ராணுவம் தகவல். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவமும், இந்திய விமானப்படையும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடைபெறும் நிலையில் இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆப்ரேஷன் சிந்தூர்: ஜெய் ஹிந்த் என இந்திய ராணுவம் பதிவு appeared first on Dinakaran.