புதுக்கோட்டை,பிப்.7: அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய பட்ஜெட் நகலை கிழித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தொமுச மாவட்ட தலைவர் ரெத்தினம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் தர், தொமுச பேரவைச் செயலாளர் வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
The post புதுக்கோட்டையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் appeared first on Dinakaran.