புதுக்கோட்டை,பிப்.10: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையிலிருந்து பழநிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் ஆலங்குடி, பட்டுக்கோட்டை, பொன்னமராவதி, இலுப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து எளிதாக வந்து செல்ல ஏதுவாக புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் தேவையான சிறப்பு பேருந்துகளை கடந்த 8ம்தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள், பக்தகோடிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென பொது மேலாளர் முகமது நாசர் கேட்டு கொண்டுள்ளார்.
The post புதுக்கோட்டையிலிருந்து பழனி தைப்பூச விழாவுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.