புதுக்கோட்டை, மே 14: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 92.55 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். புதுக்கோட்டை மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9,348 மாணவர்கள், 11,019 மாணவிகள் என மொத்தம் 20,367 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 8,306 மாணவர்கள், 10,543 மாணவிகள் என மொத்தம் 18849 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது, 92.55 சதவிகிதமாகும். இந்நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடங்கியது. புதுக்கோட்டையில் அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நேற்று முதல் வினியோகிக்கப்படும் பணி நடந்து வருகின்றன. இந்த சான்றிதழோடு டி.சி்.,யையும் மாணவ மாணவிகள் பெற்று செல்கின்றனர்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.