புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு

3 months ago 16

 

புதுக்கோட்டை,அக்.15: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 24வது மாநாடு கீரனூரில் வருகின்ற டிசம்பர் 2,3,4 தேதிகளில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 24வது மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் கீரனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் ராமையன், சங்கர், தர், உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவராக சின்னதுரை எம்எல்ஏ., செயலாளராக கலைச்செல்வன், பொருளாளராக பெருமாள் உள்ளிட்ட 101 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. டிச.2 அன்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மாவட்ட மாநாட்டுப் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறும். பிரதிநிதிகள் மாநாடு டிச.3,4 தேதிகளில் நடைபெறும். இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பர் என மாவட்ட செயலாளர் கவிவர்மன் தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு appeared first on Dinakaran.

Read Entire Article