சென்னை: கடலில் தவறி விழுந்து இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த கடந்த 30ம் தேதி அன்று 4 நபர்களுடன் IND-TN-08-MM-183 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கடலுக்குள் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்கச் சென்ற மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம், கொடிகுளம் கிராமம், ராமநகரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 30) த/பெ.பாண்டி என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் மந்திரமூர்த்தியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post புதுக்கோட்டை: கடலில் தவறி விழுந்து இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.