புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்த வருவாய் கோட்டாட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களின் பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், ஆய்விற்கு வரும் பொழுது ஓட்டுநர் பெயர் வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் வரவேண்டும். தீயணைப்பான் கருவி புதுப்பிக்கப்பட்டு நடப்பில் இருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் மருந்துகள் நடப்பில் இருக்குமாறு கொண்டு வரவேண்டும். வேகக்கட்டுப்பாடு கருவி/ GPS உபகரணம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.