புதுக்கோட்டை அருகே ஆட்டோ மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் காயம்

2 months ago 12

 

புதுக்கோட்டை, நவ.17: புதுக்கோட்டை அருகே ஆட்டோ மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார். அவரது காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் சேரன். இவர், குடும்பத்தினருடன் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து காவல் நிலையத்துக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை காவலர் முருகன் (34) ஓட்டினார்.

வடகாடு அருகே அணவயல் விநாயகர் கோயில் பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த ஜீப் மீது, எதிரே புதுக்கோட்டையை நோக்கி வந்த லோடு ஆட்டோ மோதியது. அதில் காவல் ஆய்வாளர் வாகனம் பெருத்த சேதம் ஏற்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் சேரனுக்கு காயம் ஏற்பட்டது. இரு வாகனங்களும் சேதம் அடைந்தன.

இதையடுத்து, காயம் அடைந்த சேரன், ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து லோடு ஆட்டோ ஓட்டுநரான அன்னவாசல் அருகே ஆயிப்பட்டியைச் சேர்ந்த சோலைமுத்து (44) என்பவரை மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே ஆட்டோ மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article