புதுக்கடை, ஜன.6 : புதுக்கடை அருகே ஞாறக்காடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அனுமதியின்றி மண் கடத்துவதாக புதுக்கடை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது ஜெசிபி இயந்திரம் உதவியுடன் 2 டெம்போக்களில் களிமண் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.போலீசை கண்டதும் வாகனங்களை விட்டு விட்டு அனைவரும் ஓடி விட்டனர். போலீசார் 2 டெம்போக்கள் மற்றும் ஜெசிபி வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
The post புதுக்கடை அருகே மண் கடத்திய 2 டெம்போ பறிமுதல் appeared first on Dinakaran.