புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

1 month ago 6

சென்னை,

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, புதிய ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கபடுமா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சி அமைந்தவுடன் 18 லட்சத்து 9 ஆயிரத்து 607 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை பெற 1 லட்சத்து 67 ஆயிரத்து 795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. அதுவும் விரைவில் வழங்கப்படும். இதன்படி, மொத்தமாக 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 37,299 முழு மற்றும் பகுதி நேர நியாய விலை கடைகளில் அனைத்து கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணும் இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article