புதிய ரெயில்வே திட்டங்கள் இணைப்புக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம்

14 hours ago 2

புதுடெல்லி,

நாட்டில் தற்போது, இந்திய ரெயில்வே துறையின் பயன்பாட்டில் உள்ள ரெயில்வே தண்டவாள பணிகளுடன் கூடுதலாக 1,247 கிலோ மீட்டர் தொலைவிலான ரெயில்வே தண்டவாள பணிகள் விரிவுப்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.18,658 கோடி மதிப்பிலான 4 திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் இந்த திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

இதனால், மராட்டியம், ஒடிசா மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்கள் ரெயில்வே தண்டவாள இணைப்பை பெற்று பயன்பெறும்.

இதுபற்றி பிரதமர் மோடி இன்று குறிப்பிடும்போது, பன்முக தன்மை கொண்ட இந்த 4 ரெயில்வே திட்டங்களுக்கு என்னுடைய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இணைப்புக்கான உட்கட்டமைப்பு மேம்படும், சவுகரியம் ஏற்படும், தளவாடங்களுக்கான செலவினங்கள் குறையும் மற்றும் விநியோக சங்கிலிக்கான விசயங்கள் வலுப்படும் என்றார்.

Read Entire Article